தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவு செய்ய இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேச்சையாக ஓ.பன்னீர்செல்வம் களம் கண்டார். தேனி ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தை கொண்டு வர பா.ஜ.க. முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம், அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்து வந்தார்.
ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மாற்று கட்சியில் இணைந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


0 Comments