பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து ஆலங்குளத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கிட வேண்டும் என போக்குரவத்து அமைச்சரிடம், சிவபத்மநாதன் கோரிக்கை

 


பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து ஆலங்குளத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கிட வேண்டும் என போக்குரவத்து அமைச்சரிடம், சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக மாநிலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கும் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆலங்குளமானது வளர்ந்து வரும் பெரிய நகரம் ஆகும். நல்லூர், புதுப்பட்டி, முக்கூடல்,ரெட்டியார்பட்டி, குருவன்கோட்டை, குறிப்பன் குளம். கழுநீர் குளம், பட்டமுடையார்புரம், மருதம்புத்தூர், புதுப்பட்டி, காளத்திமடம், கரும்பனூர், ஆண்டிப்பட்டி, பூலாங்குளம், பெத்தநாடார்பட்டி என 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் விளங்குகிறது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் வியாபாரம், வணிகம் செய்வோர், அரசு, தனியார் நிறுவனங்கள் பணிபுரிவோர், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள்  சென்னையில் வசித்து வருகின்றனர். அவர்கள் பொங்கலுக்கு ஊருக்கு வருவதற்கு வசதியாக சென்னையில் இருந்து ஆலங்குளத்திற்கும், பொங்கல் முடிந்து திரும்புவதற்கு ஆலங்குளத்தில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்து வசதி செய்து கொடுத்தால் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments