தாமிரபரணியில் ஆக்கிரமிப்பு மாசு அகற்ற தூத்துக்குடி கலெக்டரிடம் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை


தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் எழுத்தாளர் அய்கோ, நெல்லை மாவட்ட தலைவர் இசக்கி பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் தாமிரபரணி புனரமைப்பு தொடர்பான மனு ஒன்றை அளித்தனர்.

 அதில், "ஸ்ரீவை,  ஆழ்வை, ஏரல், ஆத்தூர் பகுதிகளில் தாமிரபரணியில் கலக்கும் சாக்கடைகளை கட்டுப்படுத்த வேண்டும். மனிதக் கழிவு இறைச்சி கழிவு கட்டடை இடுப்பாடு குப்பை மற்றும் வணிக மருத்துவ கழிவுகளை களப்போரை கடுமையாக கண்டிக்க விதிமுறைகள் ஏற்ற வேண்டும். மயான எரிதகண மேடையை ஆற்றுக்குள்  அனுமதிப்பதை தடை செய்து அதற்கென்று உள்ளாட்சி மூலம் தீர்மானம் இயற்றி வருவாய், காவல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

 ஆற்றில் ஆக்கிரமிப்பை அகற்றும் போது இயல் தாவரங்களான புல்வெளி செடிகள் மரங்களை பேண வேண்டும். ஆற்றிலும் கால்வாய்களிலும் கலந்து விட்ட கட்லா,ரோகு உள்ளிட்ட அயல்நாட்டு மீன் வகைகளை அகற்றி தாமிரபரணிக்கு உரிய தாமிரபரணி கெண்டை, அயிரை போன்றவற்றை அதிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

 குடிநீர் வேளாண்மை கால்நடை வீட்டு உபயோகத்திற்கு மிஞ்சிய நீரையே வணிக நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தூத்துக்குடி ஆலைகளில் உள்ள ஆற்று நீருக்கான பல லட்சம் ரூபாய் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். மணல் கொள்ளையர்கள் முதல் முறை திருடும்போதே குண்டர் சட்டத்தில் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்யலாம் என்ற கடந்த ஆட்சிக்கால சட்டத்தை பயன்படுத்த வேண்டும். ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும். வசபப் புரத்திலிருந்து புன்னைக்காயல் வரையில் ஆற்றின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். தாமிரபரணி பாசன குளங்கள் அனைத்தும் தூர்வாரி பராமரிக்கப்பட வேண்டும். பொதிகையடி முதல் புனித பயணத்திற்கான பேருந்து வசதி வேண்டும்.

 தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு கால்வாயில் வெள்ளம் வரும் போதே தண்ணீர் விட வேண்டும். தாமிரபரணி வைப்பாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

 இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நமாமி கங்கா திட்டம் போல், பொலிவுறு பொருநை திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தாமிரபரணி பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

Post a Comment

0 Comments