சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்துக்குட்பட்ட செங்காத்தங்குடி ஊராட்சி பகுதியை சேர்ந்தது நாதன் வயல் என்ற பகுதி. இப்பகுதியில் சுமார் 90 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்த நெல் மணிகள் அறுவடைக்காக காத்திருக்கும் நேரத்தில், வயலுக்குள் தேங்கி நிற்கும் வரப்புயர தண்ணீரால், கண்ணீரோடு வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி விவசாயிகள், விவசாயம் செய்து காத்திருந்த விவசாயிகளில் ஒருவர் கூறும் போது, வானம் பார்த்த பூமியாக இருக்கின்ற நம் பகுதியில், மழை நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறோம், இந்த விவசாயத்தை வீட்டில் இருக்கும் பெண்களுக்கென்று சேர்த்து வைத்த நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் விவசாயம் செய்து அறுவடைக்காக காத்து நிற்கின்ற நெல்மணிகளை அறுவடை எங்களால் செய்ய இயலவில்லை, வயலுக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றினால் தான், இந்த விளைப் பயிர்களை அறுவடை செய்ய முடியும், ஆனால் வெளியேற்றுவதற்கான வடிகால் வாய்க்கால் இல்லை என்று, இதை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். என்றும், இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் தெரிவித்தும் எங்களுக்கு நடவடிக்கை இல்லை என்று வேதனையோடு தெரிவித்த அவர், இந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய அரசு அலுவலர்கள் உதவ முன் வர வேண்டும் என்றும், இதற்கு நிரந்தர தீர்வு பெற்று தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர், இதற்கு தீர்வு ஏற்படாது பட்சத்தில் விவசாயிகளாகிய நாங்கள் செத்து மடிவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்றும் தெரிவித்தனர், மேலும் இதற்கு மாவட்ட ஆட்சியர் நிரந்தர தீர்வு பெற்று தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

0 Comments