மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள், பொருட்களை வழங்கிய தூத்துக்குடி பியர்ல் சிட்டி லயன்ஸ் கிளப் நிர்வாகம்


தூத்துக்குடியில், பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு லயன்ஸ் கிளப் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நல திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.. தூத்துக்குடி பியர்ல் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் எஸ்.டி.ஆர். பொன் சீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் கவர்னர் ஷாஜகான் கலந்து கொண்டு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏழை, எளிய பெண்களுக்கு தையல் மெஷின், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள், கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம், பொங்கல் பரிசாக அரிசி, பலசரக்கு பொருட்கள், ஆதரவற்ற இல்லங்களுக்கு தேவையான சோப்பு போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, லயன்ஸ் கிளப் கவர்னர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, தூத்துக்குடியில் கடந்த 2025ம் வருடத்தில் மட்டும் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறோம்.. லயன்ஸ் கிளப் எனும் சமூக சேவை நிறுவனமான லயன்ஸ் கிளப் மூலம் பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறோம்.

சர்க்கரை நோய்க்கான விழிப்புணர்வு மருத்துவ முகாம், கொரோனா காலகட்டங்களாக இருக்கட்டும் இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும் போது உடனடியாக 24 மணி நேரத்தில் அந்த மக்களுக்கு உதவும் ஒரு இயக்கம் லயன்ஸ் கிளப் நிர்வாகம். அரசாங்கம் திட்டம் தீட்டி உதவிகள் வழங்குவதற்கு மூன்று மாதங்களாகும்.  ஆனால், நாங்கள் உடனடியாக மக்களுக்கு உதவிகளை செய்து தீர்வு காண்கிறோம். சேவை ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு லயன்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. மேலும், அனைத்து பணிகளையும் அரசாங்கம் செய்து விட முடியாது, அரசுக்கு நாமும் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பணிகளையும் செய்து வருகிறோம் என்றார்.

Post a Comment

0 Comments