அஞ்சல் துறையின் சிறப்பான திட்டங்களை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தூத்துக்குடி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேசும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அஞ்சலகங்களில் மக்களுக்கான பல்வேறு சேவைகள் செயல்பட்டு வருகின்றனர் இதில் முக்கியமானவை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் முதியோருக்கான சேமிப்பு திட்டம் பிரதமரின் பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் குறைந்த தொகையில் விபத்து காப்பீடு அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு மக்களை சென்றடைந்துள்ளது.
வெறும் ரூபாய் 700 பிரிமியத்தின் 10 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் திட்டம் இது வேறெங்கும் இல்லை ஒரே குடையின் கீழ் பல்வேறு வகையான சேவைகள் குறிப்பாக பாஸ்போர்ட் சேவை மூலமாக பாஸ்போர்ட் எடுப்பது பிசினஸ் போஸ்ட் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தபால்களை அனுப்புவது ஆதார் மையங்கள் 30 இடங்களில் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது ஏராளமான மக்கள் ஆதார் அஞ்சல் துறையில் எடுத்து வருகின்றனர் போஸ்ட் பேமென்ட் பேங்க் மூலமாக விபத்து காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 பேர் பயன்பெற்று வருகின்றனர் 700 ரூபாய் கட்டினால் பத்து லட்ச ரூபாய் காப்பீடு கிடைக்கும் விபத்தில் காயத்துக்கு இதில் பணம் தர முடியும் விபத்தில் உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் அந்த அடிப்படையில் அரசு இந்த திட்டங்களை அமல்படுத்தி உள்ளது இது விளிம்பு நிலை மக்களுக்கு மிகவும் பயனுள்ள இந்தத் திட்டமான ஆகும் அஞ்சலங்களில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் துவக்கி இந்த விபத்து காப்பீட்டை மக்கள் பெறலாம் இவ்வாறு அவர் தெரிவித்தார் தலைமை போஸ்ட் மாஸ்டர் பொறுப்பு உடையார் தபால் துறை அலுவலர் பொன்ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 Comments