தேனி மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  


 தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிப்பாளர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்க த்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நியாய விலை கடை பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். 

சிறப்பு தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் அய்யனார் வரவேற்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நிர்வாக அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், மாநில செயலாளர் காமாட்சி முருகேசன், மாநில செயலாளர் பாண்டி, போராட்டக் குழு தலைவர் நாகேந்திரன், பிரச்சார குழு தலைவர் சுப்பிரமணி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர். மாநில பொருளாளர் பொன்.அமைதி சிறப்புரையாற்றினார்.

 மாவட்ட பொருளாளர் முத்துராமன் நன்றியுரையாற்றினார். பலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நியாய விலைக் கடை பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments