தேனியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் -2026 தொடர்பாக ஆய்வுக்கூட்டம்

 


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,தேனி மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத்தொகுதிகளிலும்  வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் -2026  வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்த்தல், நீக்கம்  மற்றும்  திருத்தம் தொடர்பாக  நடைபெற்று வரும் பணிகள் குறித்து  வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.கோவிந்தராவ் தலைமையில்,  மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங்  முன்னிலையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், வாக்காளர் பதிவு அலுவலர் / பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன்,  வாக்காளர் பதிவு அலுவலர்/ மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, வாக்காளர் பதிவு அலுவலர்/உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, வாக்காளர் பதிவு அலுவலர்/தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி.) கவிதா, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்  மற்றும்  வட்டாட்சியர் (தேர்தல்) சுருளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments