தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 


தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 28) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பான உத்தரவில், ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக ஆயுதப்படை டிஜிபி பணியையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஜிபி ஜெயராம், சிவில் டிஃபென்ஸ்  இயக்குநர் மற்றும் ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்ட் ஜெனரலாகவும்,


ஆவடி இணை ஆணையர் புவனேஸ்வரி,  காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாகவும், 


ரயில்வே துறை ஐஜி பாபு,  நவீனத்துவ பிரிவு ஐஜியாகவும்


சென்னை ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி,  திருச்சி ஆயுதப்படை டிஐஜியாகவும் 


கோவை சரக டிஐஜி சசி மோகன்,  திண்டுக்கல் சரக டிஐஜியாகவும்,


திண்டுக்கல் சரக டிஐஜி சாமிநாதன், கோவை சரக டிஐஜியாகவும், 


ராமநாதபுரம் சரக டிஐஜி தேஷ்முக் சேகர் சஞ்சய், திருநெல்வேலி மாநகர டிஐஜியாகவும், 


தொழில்நுட்பப் பிரிவு டிஐஜி ஜெயந்தி,  தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு டிஐஜியாகவும், 


தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு இணை ஆணையர்/ டிஐஜி ஜெயலட்சுமி தொழில்நுட்பப் பிரிவு டிஐஜியாகவும்


தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் டிஐஜி/தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரி, சிபி சக்கரவர்த்தி திருச்சி சரக டிஐஜியாகவும், 


சென்னை சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர்-II ஆதர்ஷ் பசேரா, திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராகவும்


திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ராஜன், சென்னை ரயில்வே எஸ்.பி.யாகவும்


திருச்சி மாநகர தலைமையக துணை காவல் ஆணையர் சியாமளா தேவி,  மத்திய நுண்ணறிவுப் பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும், 


மத்திய நுண்ணறிவுப் பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சாம்சன், மதுரை அமலாக்கப்பிரிவு  காவல் கண்காணிப்பாளராகவும், ,  


மதுரை மாநகர தலைமையிட துணை காவல் ஆணையர் ராஜேஸ்வரி,  கோவை மாநகர தலைமையிட துணை காவல் ஆணையராகவும், 


கோவை மாநகர தலைமையிட துணை காவல் ஆணையர் திவ்யா, மதுரை மாநகர தலைமையிட துணை காவல் ஆணையராகவும், 


செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின்,  ராணப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், 


ராணி்ப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments