புளியங்குடியில் போலீசார் வாகன சோதனையின் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.புளியங்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட கணேஷ் கஞ்சா போன்ற புகையிலை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து மாவட்ட எஸ்பி மாதவன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி மீனாட்சி நாதன் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் எஸ்ஐ பவுல் ராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் சிந்தாமணி டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வேகமாக வந்த மாருதி காரை நிறுத்தி விசாரித்ததில் காரில் இருந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்கையில் காரில் இருந்த டிக்கியில்சாக்கு பையில்மறைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 273 கிலோ புகையிலை பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்ந்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் பெங்களூரில் இருந்து கடையநல்லூருக்கு புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது அதனை தொடர்ந்துகாரில் இருந்த குஜராத்தை சேர்ந்த மகாதேவ பாய் ராபரி மகன் ஜீத்து பாய் [25], ராஜஸ்தானை சேர்ந்த குலாப் சகா மகன் பீரு சகா [26], தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரை சேர்ந்த பாபுராஜ் மகன் குருசாமி என்ற சுரேஷ் [40] , மற்றும் ஆவுடையால்புரம் திருமலை சாமி மகன் காளிராஜ் [ 37] ஆகியோரை கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்த சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் புகையிலை பொருட்கள் எங்கிருந்து யாருக்கு எப்படி விநியோகிக்கப்படுகிறது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துரிதமாக செயல் பட்டு புகையிலை பொருட்களை கைப்பற்றி குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசாருக்கு எஸ்பி மாதவன் டிஎஸ்பி மீனாட்சி நாதன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

0 Comments