சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“சென்னை ஐகோர்டு உத்தரவுப்படி, மெரினா கடற்கரையில் அமைக்க உள்ள 300 கடைகளுக்கான வியாபாரிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு ரிப்பன் கட்டிட அலுவகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் நடைபெற உள்ளது.மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள் அடங்கிய இடைக்கால குழுவின் ஒத்துழைப்புடன் ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் மேற்பார்வையில் குலுக்கல் நடைபெறும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments