பாவூர்சத்திரத்தில் ரூ.40 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியினை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தொடங்கி வைத்தார்.
பாவூர்சத்திரம்-கடையம் சாலையில் பழைய காய்கனி சந்தை மற்றும் ரெயில் நிலையம் செல்லும் சாலையானது ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலையாக அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியி;ல் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், திமுக நிர்வாகிகள் டால்டன், கபில்தேவதாஸ், பெரியார் திலீபன், இளைஞரணி துணை அமைப்பாளர் அரிகிருஷ்ணன், சிரில் பீட்டர், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments