குத்தாலத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறும் அனைத்து மகளிர்க்கும் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளதை வரவேற்கும் விதமாக அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


தமிழக அரசின் சார்பில் மகளிர் உரிமைத் தொகை பெறும் அனைத்து மகளிர்க்கும் ரூபாய் 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது.இதனை அறிந்த மகளிர் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் மகளிர் உரிமை தொகை ரூ.3000 மற்றும் கோடைகாலை சிறப்பு தொகை ரூ.2000 வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குத்தலாம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா வைத்தியநாதன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் திமுக அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர் நிறைவாக பேரூர் நகர செயலாளர் சம்சுதீன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments