சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது புதுவயல். இந்த புதுவயல் பேரூராட்சி வார்டு எண் 15-ல் அக்னி பிள்ளையார் கோவில் அருகே ஊரணி அமைந்துள்ளதால் இந்த ஊரணி அக்கினி பிள்ளையார் கோவில் ஊரணி என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரணி கடந்த 15.04.2024 தேதியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தால் ரூபாய் 1.77 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் நடைமேடை பாதை அமைக்கப்பட்டது.
இது தற்போது சுற்றுச்சுவர்கள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, அந்த ஊரணியானது பராமரிப்பு இன்றி புதர் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. இந்த ஊரணியில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெரியோர் முதல் சிறியோர் வரை நடைபெறுசி மேற்கொள்வதோடு, விளையாட்டு களமாகவும் இருந்து வருகிறது, இந்த நிலையில்கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளே நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது சரிந்து விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது, இதனால் உயிர் அச்சத்துடனே நடை பயிற்சி மேற்கொள்ளும் நபர்களும், இங்கு விளையாடும் பள்ளி குழந்தைகளும் இருந்து வருகின்றனர், உயிர் சேதம் அசம்பாவிதம் ஏற்படும் முன் அதனை சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் சரி செய்வதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மூன்றாண்டுகளுக்குள்ளேயே இது போன்ற சிதைவு ஏற்படுகிறது என்றால் தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதுபோன்று பேரூராட்சி நிர்வாக மேற்கொண்ட ஊரணி மேம்பாட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருவதுடன், கட்டிய மூன்று ஆண்டுகளுக்குள் ஊரணி சுற்றுச்சுவர் சிதலம் அடைந்துள்ளதால் பகுதியில் சர்ச்சை எழுவதுடன், மக்களிடையே பேசும் பொருளாக மாறி வருகிறது, தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.



0 Comments