இறைபணி 62வது ஆண்டு தொடக்கத்தையொட்டி முத்துமாலைபுரம் கிராமத்தில் வீடு, வீடாக தோரணமலை முருகன் பிரசாத பை வழங்கல்


முத்துமாலைபுரம் கிராமத்தில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணன் குடும்பத்தினரின் இறைபணி 62வது ஆண்டு தொடக்கத்தையொட்டி வீடு, வீடாக தோரணமலை முருகன் பிரசாத பை வழங்கப்பட்டது.

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை -ஸ்ரீமுருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணன் கடந்த 1965ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி முதல் தோரணமலை முருகனுக்கு இறைபணி செய்ய ஆரம்பித்தார். தற்போது 62வது ஆண்டாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இறைப்பணி மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவிலில் ஆன்மீக பணியுடன் பல்வேறு சமுதாய பணிகள், கல்விப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

அதன்படி ;கோவிலுக்கு வருகை தரும் மாணவர்கள் அறிவு வளர்ச்சி பெற வேண்டி கே.ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் ஆன்மீகம், சித்தர்கள், மருத்துவம், பொது அறிவு புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள், பள்ளி கல்லூரி பாடப்புத்தகங்கள், பொறியியல் மற்றும் நீட் தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் உள்ளன. அத்துடன் காவல்துறை மற்றும் ராணுவ ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான கோவில் வளாகத்தில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போன்ற செயல்பாடுகளுக்காக உடற்பயிற்சி மைதானம் அமைந்துள்ளது.

மேலும் கோடை விடுமுறை நாட்கள் மற்றும் மாதந்தோறும் கிராமப்புற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களிடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

இதே போல் அவரது சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில் ;உள்ள அவர்களது குடும்ப வீட்டில் கிராமப்புற மாணவ, மாணவிகள் படிப்பதற்காக ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு பள்ளிகளை சேர்ந்த 102 மாணவ, மாணவிகள் கட்டணமின்றி படித்து வருகின்றனர். இதே போல்  கிராமப்புற மாணவ, மாணவிகளுக்காக அங்கு ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது.

இந்நிலையில் ஆதிநாராயணன் குடும்பத்தினரின் இறைபணி 62வது ஆண்டு தொடக்கத்தையொட்டி அவரது சொந்த ஊரான முத்துமாலைபுரம் கிராமத்தில் உள்ள 600;க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தோரணமலை முருகனின் பிரசாத பை பொதுமக்களை நேரில் சந்தித்து வழங்கப்பட்டது. இதில் மாலை நேர படிப்பக மாணவர்கள் மற்றும் தோரணமலை கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை  கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Post a Comment

0 Comments