தேனியில் தானம் அறக்கட்டளை சார்பில் பிரம்மாண்ட நடைபயணம்..... 'நிலைத்த நிதி உள்ளடக்கம்' குறித்து விழிப்புணர்வு.....


தேனி மண்டல DHAN அறக்கட்டளை சார்பில், பொதுமக்களிடையே சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "நிலையான நிதி உள்ளடக்கம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட விழிப்புணர்வு நடைபயணம் (வாக்கத்தான்-2026) நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு, தானம் அறக்கட்டளை தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர்  வித்யா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்  ஆதிபௌஸ் வரவேற்புரை ஆற்றினார். குத்துவிளக்கேற்றி தொடங்கப்பட்ட இந்த நடைபயணத்தில், சமூகத்தின் பல்வேறு துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்திரா (துணை பொது மேலாளர், கனரா வங்கி தேனி),பி. கார்த்திகேயன் (மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், கனரா வங்கி)ஆர். சுரேஷ், (வேளாண்மைத் துறை துணை இயக்குனர்),சுதாகர் (தமிழ்நாடு மாநில உணவகங்கள் சங்கம் & கௌமாரியம்மன் பேக்கரி உரிமையாளர்) ஜெயலட்சுமி, (சுஹாம் மருத்துவமனை தேனி),முனைவர் எஸ். ராஜமாணிக்கம், (காவல் உதவி ஆய்வாளர், பெரியகுளம்)ராமலட்சுமி, (காவல் ஆய்வாளர், தேனி)மேலும், பல்வேறு வங்கிகளின் கிளை மேலாளர்கள், வேளாண் அலுவலர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிதி விழிப்புணர்வு குறித்த உரைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், சாமானிய மக்களும் வங்கிச் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், முறையான சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் ஒரு குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு எவ்வளவு அவசியம் என்பதையும் விளக்கிக் கூறினர்.

நடைபயணத்தின் நிறைவாக, சிறப்பாகப் பணியாற்றியவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர் வித்யா நன்றியுரை ஆற்றினார். இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மகளிர் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு "நிதி சார்ந்த விழிப்புணர்வு" வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

டிஜிட்டல் பரிவர்த்தனை நவீன காலத்தில் டிஜிட்டல் வங்கிச் சேவைகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த விழிப்புணர்வும் இப்போட்டியில் வலியுறுத்தப்பட்டது.

பெண்கள் முன்னேற்றம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறு தொழில் தொடங்குவதற்கும், வங்கிக் கடன்களை முறையாகப் பெற்று பொருளாதார சுதந்திரம் அடைவதற்கும் இந்த நடைபயணம் ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிதி விழிப்புணர்வுடன் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பசுமைத் தேனி குறித்த வாசகங்களும் பேரணியில் இடம்பெற்றன.

Post a Comment

0 Comments