தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மேல்நிலைப் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் நமது திராவிட மாடல் அரசின் அனைத்து மாணவ, மாணவியருக்குக்கும், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், பெரியகுளம் ஒன்றியம் சில்வார் பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் வழங்கினார்.
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியன்,பெரியகுளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.எம்.பாண்டியன் ஒன்றிய துனை செயலாளர் வெங்கடாசலம் முன்னாள் ஊராட்சி தலைவர் பரமசிவம் கிளைக் கழக செயலாளர் மாயன், பரமசிவன், ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவியர் கலந்துக்கொண்டனர்


0 Comments