ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரை தேமுதிக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு..... கூட்டணி கட்சி நிர்வாகிகள் மரியாதை


 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையினை ஏற்று, திமுக கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. தேமுதிக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சுப்பிரமணியம் தலைமையில், மாவட்ட பொருளாளர் ஜீவா சுப்பிரமணியம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் தேமுதிக நிர்வாகிகள் திரளாக வருகை தந்தனர். 



இந்தச் சந்திப்பின் போது, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம் அவர்களுக்கு தேமுதிக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தேமுதிக நம்பியூர் ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, அந்தியூர் ஒன்றிய செயலாளர் சுதாகர், அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், சத்தி ஒன்றிய செயலாளர் சஜித், தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் சண்முக மூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர் கணக்கம்பாளையம் பழனிச்சாமி, தாளவாடி ஒன்றிய செயலாளர் பெரியசாமி, சத்தி நகர செயலாளர் கண்ணன், அத்தாணி விஜயகுமார், கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளர் கந்தசாமி, சத்தி ஒன்றிய பசுவபாளையம் சிவகுமார், சத்தி நகர ரொட்டி ஆறுமுகம், அமான், அரியப்பம்பாளையம் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தச் சந்திப்பு இரு கட்சி நிர்வாகிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592.

Post a Comment

0 Comments