பழவேற்காடு தினத்தை முன்னிட்டு கட்டுமரப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் துவக்கி வைத்து பரிசுகள் வழங்கினார்


திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் 15 ஆவது ஆண்டாக பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டது.உலக சதுப்பு நில தினத்தை பழவேற்காடு தினமாக ஆர்.டி.பவுண்டேசன் எனும் அமைப்பு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.இந்நாளில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டி,ஓவிய போட்டிகள்,பனை ஓலை கைவினை பொருள்கள் செய்யும் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக அனைவரையும் கவரும் வண்ணம் நடைபெறும் கட்டுமரப் போட்டியினை திருவள்ளூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் துவக்கி வைத்தார்.இதில் ஜமீலாபாத் கிராமத்தை சேர்ந்த மாலிக் மற்றும் நைனா முகம்மது ஆகியோர் சமபுள்ளியில் வெற்றி பெற்றனர். பழவேற்காடு ஜ.சு.அரசினர் மேல்நிலைப் பள்ளி,செயின்ட் ஜோசப் உயர்நிலை பள்ளி,புலிகட் நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளி,ஜமீலாபாத் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.  ஆர் டி பவுண்டேஷன் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் சேவியர் பெனிடிக் தலைமையில்ஆர்.டி.பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் சுமன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் பரிசுகளை வழங்கினார்.

மீன்வளத்துறை ஆய்வாளர் செல்வா,மீன்வளத்துறை இளநிலை உதவியாளர் உதயகுமார்,திருப்பாலைவனம் காவல் உதவி ஆய்வாளர் மனோவா தேவநேசன் செபஸ்டின், ஆசிரியர் மோகன்,சமூக ஆர்வலர் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளும்,லயோலா கல்லூரி மாணவர்களின் பறையாட்டம்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,சிலம்பாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.



Post a Comment

0 Comments