அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் எம்எல்ஏ வெங்கடாசலம் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்



ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உலகம் உங்கள் கையில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடாசலம் கலந்துகொண்டு இரண்டாம் ஆண்டு பயிலும்  175 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர்  பாண்டியம்மாள் , அந்தியூர் பேரூர் கழக செயலாளர்  காளிதாஸ் , அந்தியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்  பழனிச்சாமி ,  அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்  விமலா தேவி ,அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் ,அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் ,பேரூர் கழக பொருளாளர்  சக்தீஸ்குமார் ,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சேகர் ,  கவிதா ,பேரூர் கழக துணைச் செயலாளர்  பாப்பாத்தி ,ஈரோடு வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர்  சண்முகசுந்தரம் ,தகவல் தொழில்நுட்ப அணி பேரூர் ஒருங்கிணைப்பாளர்  தங்கராஜ் , வார்டு கழக செயலாளர்கள் முத்து, ரவி , துரைசாமி  மற்றும் காவேரி ,பழனிச்சாமி, பச்சமுத்து,  நட்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி






Post a Comment

0 Comments