கவுந்தப்பாடியில் அதிமுக ஈரோடு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் கோபால் தலைமையில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்


ஈரோடு மாவட்டம் , கவுந்தப்பாடி கவின் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழக தலைமை ஒருங்கிணைப்பாளரும்,  முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன்  முன்னிலையில், அதிமுக ஈரோடு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும்,  பவானி சட்டமன்ற தொகுதி முன்னாள் வேட்பாளருமான பா. கோபால்  தலைமையில், ஈரோடு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ரமேஷ்,  பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பிரச்சார அணி செயலாளர் பாலசுப்பிரமணியம்,  தேசிய முற்போக்கு திராவிட கழகம் முன்னாள் சூரியம்பாளையம் பகுதி செயலாளர் நைனாமலை,  ஐடி விங்க் துணைச் செயலாளர்  நவீன் குமார், சித்த மருத்துவர் டாக்டர் பிரனேஷ் மற்றும்  தேசிய முற்போக்கு திராவிட கழகம் பவானி ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகேஷ்,  மெடக்குறிச்சி ஒன்றிய முன்னாள் இளைஞரணி செயலாளர் நந்தகுமார் ,  தேமுதிக நிர்வாகி  நாகராஜ் உட்பட  1000க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள்   தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைத்துக் கொண்டார்கள்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments