மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் மீனாட்சி மருத்துவமனை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது நல மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமிற்கு ஓஎன்ஜிசி, அசட் சப்போர்ட் மேனேஜர் பிரசன்ஜித் கோகய் தலைமை வகித்தார்,ஓஎன்ஜிசி சிஎஸ்ஆர் பொறுப்பாளர் தங்கமணி ,ஓஎன்ஜிசி அத்தீன் மண்டால்,ஓஎன்ஜிசி பிங்குவா, முன்னிலை வகித்தனர்,சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார் இதில் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன்,குத்தாலம் வட்டாட்சியர் ராஜரத்தினம்,பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா,ஓஎன்ஜிசி மருத்துவ அலுவலர் டாக்டர் கணேஷ்குமார், எல்டர்ஸ் ஃபார் எல்டஸ் நிறுவன இயக்குனர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முகாமில் 300க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் மருத்துவரிடம் தங்களது உடலை பரிசோதனை செய்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனர்.கண் பரிசோதனை முடிவில் கண் கண்ணாடி தேவைப்படும் நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி தயார் செய்து வழங்கப்பட உள்ளது இம்முகாம் ஏற்பாடுகளை கடலூரை சேர்ந்த எல்டர்ஸ் ஃபார் எல்டர்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments