மயிலாடுதுறை: மேரா யுவ பாரத் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி




மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் கங்கணம் புத்தூர் பகுதியில் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இந்திய அரசின் இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேரா யுவ பாரத் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.மைபாரத் கேந்திரா மயிலாடுதுறை துணை இயக்குனர் திருநீலகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நஸ்ருல் முஸ்லிமீன் பள்ளி முதல்வர் உஷா,சிசிசி சமுதாய கல்லூரி நிறுவனர் தலைவர் ஆர்.காமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி துணை முதல்வர் ரேனிஸ் வரவேற்றார்.உடற்கல்வி ஆசிரியர் தினேஷ்,ராபின், சரவணகுமார் ஆகியோர் பங்குபெற்று மை பாரத் தன்னார்வலர்களுக்கு இளையோர் மன்றத்தினர் கலந்து கொண்ட கையுந்துபந்து,சிலம்பம், ஓட்டப்பந்தயம்,கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளை நடத்தினர். வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு வழக்கறிஞர் ம.விஜி,இயற்கையின் நல மருத்துவர் ரா.கதிர்வேல்,குதம்பை சித்தர் அறக்கட்டளை ராஜரத்தினம் ஆகியோர் கோப்பை,பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர்.பள்ளி தமிழ் ஆசிரியர் சண்முகநாதன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments