திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகா தேவி சமேத ஸ்ரீ பாலீஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் பகுதியில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு திருகுடமுழுக்கு  நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின்   வெகுவிமர்சியாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 திருக்கல்யாணம் முடிந்தவுடன்  அலங்கரிக்கப்பட்ட தெப்பல் உற்சவத்தில் அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகாதேவி சமேத அருள்மிகு ஸ்ரீபாலீஸ்வரர் எழுந்தருளி ஒன்பது முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்நிகழ்ச்சியை பயிர் கோட்ட வேளாண் மரபினர் செய்திருந்தனர்  மரபுத் தலைவர் துரை முதலியார் மரபு செயலாளர் பூமிநாதன் முதலியார் மரபு ஆலோசகர் நாராயணன் முதலியார் மரபு பொருளாளர் இளங்கோவன் முதலியார் மரபுத் துணைத் தலைவர் விநாயகம் முதலியார் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக  திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமாண சிறுணியம் பலராமன்  , மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் இ ஆர் தமிழ்ச்செல்வன் , பா சங்கர், நகர செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட மெதூர், திருப்பாலைவனம், பழவேற்காடு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் திருப்பாலைவனம் காவல் நிலையம் காளிதாஸ் தலைமையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments