தேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் வரலாற்று துறையில் நிலையான நிதி வழங்குதல் சார்பாக பண்டைய தமிழ் நாகரிகம் மற்றும் சங்க கால புதைபொருள்கள் பற்றிய கருத்தரங்கமும், பயிற்சி பட்டறையும், உள் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி முனைவர் எஸ். இருதய கலைச்செல்வம், கல்லூரி செயலர் அருட் சகோதரி முனைவர் ஆர். சாந்தா மேரி ஜோசிற்றா, இல்ல தலைமை சகோதரி முனைவர் எம். ரெஜினாள், முன்னாள் வரலாற்று துறையின் பேராசிரியர்களான அருட் சகோதரி முனைவர். மரிய அல்போன்சாள், முனைவர் ப. புளோரஸ் மேரி, மற்றும் இன்றைய துறை தலைவர் முனைவர் அ. ஜெசிந்தா வில்வீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முனைவர் பி. உபஹார மேரி வரவேற்புரை வழங்கினார். வரலாற்று துறையின் இதழான 'ஹிஸ்டோரியா' வெளியிடப்பட்டது. தாமரிக்கா புதைபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுப்பினர்களான ஆகாஷ், போரிஸ், செல்வி.ஜெரோமி பெட்ரீஸியா, செல்வி சகிலா ஆகியோர் களிமண்ணில் பொருட்கள் உருவாக்குவது பற்றி மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.ஆகாஷ் புதைபொருள் ஆராய்ச்சி பற்றி சிறப்புரை ஆற்றினார். முனைவர் எஸ். சகாயமேரி அவர்கள் நன்றியுரை வழங்கினார் இப்பயிற்சி பட்டறையில் 109 மேலான மாணவிகளும் 14 பேராசிரியர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

0 Comments