மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தல்-2026யை முன்னிட்டு மயிலாடுதுறை,சீர்காழி,பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுப்பட உள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்டல குழுக்களை சேர்ந்த அலுவலர்களுக்கு 10 முதல் 12 வாக்குச்சாவடிகள் வழங்கப்பட்டு,அதை முழுமையாக கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.வாக்குச்சாவடி வரைபடத்தில் உள்ள வழிதடத்தின்படி வாக்குச்சாவடிக்கு செல்ல மற்றும் அணுகும் தன்மை உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.அதனை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளை அனைத்து மண்டல அலுவலர்களும் உடனடியாக பார்வையிட்டு,வாக்குப்பதிவிற்கு ஏற்றவாறு தயார்நிலையில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 93 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மண்டல குழுக்களுக்கும் 279 காவலர்கள்,558 வருவாய் துறை ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இப்பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்கள் தங்களை முழுமையாய ஈடுப்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து,அதன்படி செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்ஃமாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தினார் இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி,மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா,சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உதவி ஆணையர் மாணிக்கராஜ்,மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் முத்துவடிவேல்,அன்பழகன்,தனி வட்டாட்சியர் தேர்தல் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


0 Comments