சந்திர கிரகணம்..... நாளை திருப்பதியில் 10 மணி நேரம் நடை அடைப்பு

 


நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் 3-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்த கிரகணம் பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு பிறகு, கோவில் தூய்மைபடுத்தப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் திருப்பதியில் பக்தர்களுக்கு இன்றும்(2-ந்தேதி), நாளையும்(3-ந்தேதி) சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படாது என்றும், நாளை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments