பொன்னேரி: மீஞ்சூர் அருகே அறுவடை சுவிசேஷ சபையின் 16-வது ஆண்டு விழா மற்றும் சீயோன் வேதாகம கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது


மீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு கிராமத்தில் உள்ள அறுவடை சுவிசேஷ சபையின் 16 வது ஆண்டு விழா மற்றும் சீயோன் வேதாகம கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது விழாவிற்கு சென்னை சீயோன் வேதாகம கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியநாதன் தலைமை தாங்கினார். அறுவடை சுவிசேஷ சபை நிறுவனர்கள் ஸ்டீபன், நான்சி ஸ்டீபன், சீயோன் வேதாகம கல்லூரி இயக்குனர் ஐசக் எபினேசர் ,நிறுவனர் சகோதரி கிரேபினா ஐசக் ஆகியோர் முன்னிலை வகிததனர்.


 சிறப்பு அழைப்பாளராக ஆபரேஷன் எவரெஸ்ட் சென்னை பால் ராஜேந்திரன், விசுவாச ஐக்கிய திருச்சபை திருவள்ளூர் சுந்தர் மகிமை தாஸ் ,யெஸீரன் ஊழிங்கள் சென்னை யோவான் ஸ்னானன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . புது வாழ்வு சபை ஆவடி டாக்டர் ஜேக்கப் ஜோஷி கலந்து கொண்டு பட்டமளிப்பு சான்றிதழ்களை வழங்கி மாணவ மாணவிகளை வாழ்த்த பேசினார்.இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் அனைவருக்கும் அறுசுவை உணவுகளை அறுவடை சுவிசேஷ சபை ஏற்பாடு செய்திருந்தது.

Post a Comment

0 Comments