தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு (+2 பிளஸ் டூ) மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நாளை மார்ச் 2-ந் தேதி தொடங்குகின்றன. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.பிளஸ் டூ பொதுத் தேர்வுகளுக்கான தேதி கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் (TNDGE) வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வுகள் மார்ச் 2-ந் தேதி முதல் மார்ச் 26-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளன.பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 14-ந் தேதி வரை நடத்தப்பட்டன. பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதால், கல்வித்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0 Comments