போர் பதற்றம்..... சென்னை விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து



இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தங்களது விமான நிலையத்தை மூடிவிட்டது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

2-வது நாளாக நேற்றும் சென்னையில் இருந்து வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் செல்லும் 17 புறப்பாடு விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்களும் என் 33 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.இந்த நிலையில், போர் பதற்றத்தால் 3-வது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புறப்பாடு விமானங்கள் 18 மற்றும் வருகை விமானங்கள் 18 என மொத்தம் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே மற்ற விமானங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கும் பயணிகளும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானம் வந்து செல்லும் நேரம் உள்ளிட்டவைகளை கேட்டு தெரிந்து கொண்டு தங்கள் பயணத்தை அமைத்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

Post a Comment

0 Comments