சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்த்த விசாரணை கைதி ஆகாஷ் கடந்த 7ம் தேதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் மானாமதுரை கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஆகாஷின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் SC, ST ஆணையம் மூலம் வழங்கப்படும் நிதியின் முதற்கட்டமாக ரூ 6 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணன், எனது மகன் ஆகாஷை கைது செய்து காலை உடைத்த காவலர்கள் தகுத்த சிகிச்சை வழங்காமல் படுகொலை செய்து விட்டார்கள். ஆய்வாளர் திலிபன் உட்பட பணியில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினையும் கைது செய்து வழக்கு நடத்த வேண்டும் என்றும், சம்மந்தப்பட காவல்துறையினரை கைது செய்யாமல் எனது மகனின் உடலை வாங்க மாட்டேன் என தெரிவித்தார்.

0 Comments