திருப்பத்தூரில் பிளாசா பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுக்காட்டாம்பூரில் செயல்பட்டு வரும் பிளாசா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 16ஆம் ஆண்டு ஆண்டு விழா வெகு விமசியாக நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆண்டறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். 

விழாவிற்கு பள்ளி தலைவர் சேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அழகப்பா கல்லூரி பேராசிரியர் சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றால் பெற்றோர்களாகிய உங்களால் மட்டுமே அது சாத்தியம். ஏனென்றால் உங்கள் பிள்ளைகளின் மத்தியில் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வெற்றி பெற அவர்களுக்கென்று ஒரு தனி இடம் உள்ளது அந்த அந்த இடத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கூறி பிள்ளைகளை வளர்ப்பதினால் மட்டுமே அவர்கள் மத்தியில் பொறாமை குணம் முற்றிலுமாக இல்லாமல் போகும். மேலும் பிள்ளைகள் மத்தியில் நீங்கள் கடந்து வந்த பாதைகளையும், நல்லொழுக்கத்தை போதிக்கும் புராண இதிகாசங்களையும் கூறி வளர்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அறிவியலின் வளர்ச்சி உலகத்தையே சுருங்கவைத்துவிட்டது.

அருகாமையில் உள்ள அண்டை வீட்டுக்காரரிடம் கூட நட்புறவு பேணாத ஒரு சமூகமாக நாம் வாழ்ந்து வருகிறோம்.இதற்கு தொலைக்காட்சி சீரியலின் சீரழிவே இதற்கு காரணம். எனவே இத்தகைய நிலையில் இருந்து நம்மைநாம் சீராக்கிக் கொள்ள நம்முடைய எண்ணத்தையும் குணத்தையும் சற்று இடம் மாற்றினாலே போதும். ஒரு தலைசிறந்த வருங்கால சமூகத்தை பெற்றோராகிய நாம் உருவாக்க முடியும் என்று கூறினார். தொடர்ந்து ஆண்டு முழுவதும் விடுமுறை எடுக்காமலும்,அதிக அளவில் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கும்,மாவட்ட வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும்,பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகளும் சான்றிதழும் வழங்கி பாராட்டப்பட்டது. 

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர்கள் முத்துக்குமாரி, இந்துமதி,வங்கி மேலாளர் தீபக் மிஸ்ரா, பொறியாளர்கள் கார்த்திக் மணிகண்டன், அழகு குமார், சுதா, மாணிக்கவேல், அரிமா சங்க நிர்வாகிகள் ஜோதி பழனிவேல், யூசுப் ரியாஸ் மற்றும் பெற்றோர்கள் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நிறைவாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Post a Comment

0 Comments