சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் சேது ஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை தலைசிறந்த மாணாக்கர்களாக உருவாக்க பல ஆக்கபூர்வமான பல்வேறு பயிற்சிகளும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளும் தொடர்படியாக நடத்தப்பட்டு வருகிறது.பொதுவாக இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் அறிவியலின் வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
அப்படி வளர்ந்து வரும் அறிவியலின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பாக விளங்கி வருவது விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான வளர்ச்சியாகும். குறிப்பாக விண்ணில் இருக்கக்கூடிய கோள்கள் மற்றும் அது குறித்த தகவல்களை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக இப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு காணொளி காட்சியாக வழங்க பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஸ்பேஸ் டிரிப் பிளானிடோரியம் என்ற தனியார் நிறுவன விண்வெளி கோள்களின் ஆராய்ச்சி மையமும், பள்ளி நிர்வாகமும் இணைந்து "ஸ்பேஸ் ட்ரிப்" தலைப்பில் இப்பள்ளி வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற அறிவியல் தின கண்காட்சிக்கு இப்பள்ளி தாளாளரும்,சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவன தலைவரருமான சேது குமணன் தலைமை தாங்கினார்.
முன்னதாக பள்ளி முதல்வர் ரேசாரியோ பிரின்ஸ், பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் வரவேற்பு உரை நிகழ்த்தினர்.சென்னை சோக்கா இக்கேதா கல்லூரி செயலாளர் கோகிலா குமணன், துணை முதல்வர் கண்மணி, சேது பாஸ்கரா கழுவி குழும போக்குவரத்துமேலாளர்மாணிக்கவாசகம்,கட்டிட மேலாளர் அமுதா, ஆகியோர் முன்னிலை வகிததனர்.தொடர்ந்து விண்ணில் பறக்கும் விமானத்தின் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலமாகவும் ,விண்வெளி கோள்கள் குறித்து 360 டிகிரி கோணத்தில்(3D) இங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்சச பலூனில் திரை காணொளி காட்சி வாயிலாகவும்,மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இது குறித்து தனியார் நிறுவன விண்வெளி கோள்களின் ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் சரவணப்பாண்டி கூறுகையில் இன்றைய காலகட்டத்தில் அறிவியலின் பரிணாம வளர்ச்சி மின்னல் வேகத்தில் வளர்ந்து கொண்டு செல்கிறது.
அப்படி வளர்ந்து வரும் அறிவியல் குறித்த கல்வியை மாணவ மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் உயர்கல்விக்கு செல்லும் வேளையில் விண்வெளி கோள்கள் குறித்த ஆராய்ச்சிகளை எளிதில் கையாள முடிவதோடு, வருங்காலத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிக்க ஏதுவாக இது போன்ற பயிற்சிகள் அமையும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


0 Comments