சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து நிலையம் எதிரே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திமுக ஒன்றிய நகர ஏற்பாட்டில் பேரூராட்சி மன்ற சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமையில் கழக நிர்வாகிகள் பழங்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
முன்னதாக கழகத்தின் செயல்பாடுகள் குறித்து கோஷங்கள் எழுப்பிய நிர்வாகிகள் தொடர்ந்து கோடை கலம் தொடங்கிய நிலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கும் சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களை மகிழ்ச்சியோடு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய நகர் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


0 Comments