கீழக்கரை அஹ்மத் தெரு சங்கம் சார்பில் நோன்பு திறப்பு



கீழக்கரை அஹமத் தெரு பொதுநல சங்கத்தின் கீழ் இயங்கி வரும் அஸ்வான் மதரசா மாணவர்களுக்கு இப்தார் நிகழ்ச்சி மேலத்தெரு அபூபக்கர் சித்தீக் பெரிய பள்ளிவாசலில்  நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மதரசா மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் மேலத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை ஆலிம் மன்சூர் அலி நூரி உலக நன்மைக்காகவும் உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க மூத்த நிர்வாகிகள்,அஸ்வான் செயலாளர் நைனா சாகிப் ,நிகழ்ச்சி ஏற்பாடுகளை அஸ்வான் ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.கபார்கான் தலைமையில் அஹமத் தெரு இளைஞர்கள் செய்திருந்தனர். இதில் ஜமாத்தார்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments