நாகை - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கருகும் பயிருக்கு தண்ணீர் கேட்டு திடீர் சாலை மறியல்


நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு லட்சத்தை 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர். தொடர்ச்சியாக நேரடி நெல் விதைப்பு நேரத்தில் ஏற்பட்ட தொடர் கனமழையால் நாற்று  முளைக்கும் தருவாயில் முற்றிலுமாக அழுகியது  இதனால் விவசாயிகள் இரண்டு முறை நேரடி விதைப்பில் ஈடுபட்டு காலதாமதத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக சாகுபடி செய்துள்ளனர்.  



இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 25000 முதல் 35,000 வரை செலவு செய்துள்ளனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர்  ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலக்குறிச்சி,   சோழவித்தியாபுரம், கீழையூர் திருவாய்மூர், திருக்குவளை, மீனம்பாநல்லூர்,  சுற்று வட்டாரப்பகுதியில் சுமார் 39 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 70 நாள் பயிராக உள்ள தாளடி பயிர்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் வயல்கள் வெடித்தும் பயிர்கள் கருகி வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு கருகும் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கடைமடை வரை இதுவரை தண்ணீர் வந்து  சேராததால்  ஆத்திரமடைந்த விவசாயிகள் நாகை தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை மேலப்பிடாக்கை பகுதியில் விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும்  வெண்ணார் வடிநிலை கோட்ட உதவி செயற்பொறியாளர் வினோத்  போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் பெற்று தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.


நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி 

Post a Comment

0 Comments