சிறுவர்களே, மாணவர்களே அரசியல் வேண்டாம்! உஷார்! சமூக ஆர்வலர் மயிலாடுதுறை அ.அப்பர்சுந்தரம் அறிவுரை !



தமிழ்நாட்டில் தற்பொழுது தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு எங்கும், எதிலும் அரசியல் பேச்சுகள், தாக்கங்கள் அதிகரித்து விட்டன. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல், வாக்கு சேகரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபடவுள்ள நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமைதாங்கி என்னும் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய் கட்சி மாவட்டச் செயலாளர் மலர்விழி என்பவர் தனது பிரச்சாரத்தின் போது சிறார்களை பயன்படுத்தி கோஷங்களை எழுப்பிய செய்தி தேர்தல் துவக்கத்திலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 அரசியல் என்றால் என்ன என்று கூட அறியாத உணராத வயதில் இளம் பிஞ்சுகள் மனதில் நஞ்சை விதைக்கும் அரசியல் கட்சியினர் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை பாய வேண்டும்.18 வயதிற்கு பிறகுதான் வாக்களிக்கும் உரிமை பெற்ற நாம் சிறார்களைப் பயன்படுத்துவது சட்டப்படி பெரும் குற்றமாகும். விளையாட்டாக நண்பர்களுடன் தேர்தல் பிரச்சாரத்திலும் பணிகளிலும் பங்கேற்கும் சிறார்கள் மனது படிப்பிலிருந்து முற்றிலும் விலகி வாழ்க்கையே பாதிக்கப்பட்டு எதிர்காலமே வீணாகும் அபாயம் உள்ளது என்பது நிதர்சனம். அவ்வாறு வாழ்க்கையை தொலைத்த பலரும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. எதிர்கால மாணவனின் வாழ்வை கெடுக்காது பொறுப்புணர்வோடு அனைத்து அரசியல் கட்சிகளும் இவ்விஷயத்தில் பணியாற்ற வேண்டும், எக்காரணம் கொண்டும் சிறுவர்களை பிரச்சாரத்திற்கோ, கூட்டம் காட்டுவதற்கோ அழைக்கக்கூடாது என்னும் கட்டுப்பாடு மிகமிக அவசியம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். அரசியல் யாரையும் பற்றாது அவ்வாறு பற்றினால் அது விடாது என்பது பலரின் அனுபவம். அரசியலில் வென்றவர்களை விட தோற்றவர்களே மிக மிக அதிகம் என்பதையும் பார்க்க வேண்டும். தற்பொழுது அரசியல் என்பது நேர்மையற்ற, அநாகரீகமான, சட்ட விரோத, தொண்டுள்மற்ற, சுயநலவாதிகளை  இக்காலத்தில் அரசியலில் அதிகமாக ஆளுமை செய்கிறார்கள் என்பதும்  அவரவர்களின் ஆய்வுக்கே விட்டு விடுவோம். ஆகுவே தான் அரசியல் குறித்த முழுமையான தெளிவு கிடைக்கும் வயதில்,  கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதில்  தவறில்லை என்று கூறுகிறோம். 

அதுவரை பொறுமை காப்பதும், காக்க வைப்பதும் சமூகத்தின் ஒப்பற்ற பொறுப்பாகும். மேலும் இவற்றை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து,  மாணவர்களை பாழாக்க நினைப்போரை,  அரசியலில் எதிர்காலம் இல்லாமல் முடக்கும் அளவில் சட்டரீதியான பணியினை தேர்தல் ஆணையம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை பங்கேற்க செய்த சம்பவம் அரசியல் கட்சிகளுக்கும், பெற்றோர்களுக்கும் பயத்தை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்.    இளம் வயதில் உள்ள சிறுவர்களே, மாணவர்களே அரசியல் தற்போதைக்கு வேண்டாம். உஷாராக இருங்கள் என்று சமூக ஆர்வலர் மயிலாடுதுறை அ.அப்பர்சுந்தரம் அறிவுரை கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments