திருப்பத்தூர் உட்கோட்ட அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு ஆய்வகங்கள் திறப்பு விழா

 


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட  திருப்பத்தூர் உட்கோட்ட அலுவலக வளாகத்திலும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுபாடு ஆய்வகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட திருப்பத்தூர்  உட்கோட்ட அலுவலக வளாகத்தில்         ரூபாய் 1.74  கோடி மதிப்பீட்டிலும்  தரக்கட்டுபாடு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வகங்கள் இன்றையதினம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.இதுபோன்று பொதுமக்களின் தேவைகளை அறிந்து, திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்ந்து வருகிறார்கள் என அமைச்சர்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில்,  கோட்டப்பொறியாளர் சந்திரன், , பேரூராட்சி தலைவர்கள்   கோகிலாராணி நாராயணன் (திருப்பத்தூர்),திருப்பத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கான் முகமது, உதவி கோட்டப் பொறியாளர்கள் பவித்ரா (திருப்பத்தூர்), சையது  இப்ராஹிம் (சிவகங்கை) மற்றும் நெடுஞ்சாலைத்துறையை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments