கீழ்வேளூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொலைநோக்கி வழி சூரியன் மற்றும் சூரிய கரும்புள்ளிகள் பார்க்கும் நிகழ்வு


 நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொலைநோக்கி வழி சூரியன் மற்றும் சூரிய கரும்புள்ளிகள் பார்க்கும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு,  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்  அறிவியலை கொண்டாடுவோம் திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக கீழ்வேளூர் ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்  சாட்டியக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொலைநோக்கி வழி சூரியன் மற்றும் சூரிய கரும்புள்ளிகள் பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது.


கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர்கள் வ. சுப்ரமணியன்,இரா. அன்பழகன்  கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தனர்.வானியல் கருத்தாளர் வே. பரத்குமார்  தொலைநோக்கி மூலம் இந்நிகழ்வு மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார தலைவருமான  தே.செ.சாந்தி  மற்றும் ஆசிரியர்கள் பூபாலன், சாந்தி, உஷாராணி மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments