முதுகுளத்தூரில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

    


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தவெக சார்பில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர்கழக கிளைக்கழக பூத் நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் விஜித் ராஜா வரவேற்புரை வழங்கினார் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.மதன் தலைமை தாங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட சார்புஅணி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் நகர செயலாளர் கிளை செயலாளர்கள் பூத்கமிட்டி நிர்வாகிகள் என 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மதன் பேசுகையில் கட்சியினர் பொதுமக்களிடம் தலைவர் வெளியிடும் தேர்தல்அறிக்கையை கொண்டுபோய் சேர்த்து தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சியினர் ஈடுபட்டு வெற்றியினை தேடி தரவேண்டும் என பேசினார் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் யாசர் அரபாத் ஏற்பாடு செய்து இருந்தார்.

Post a Comment

0 Comments