சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நீர் நிலைகள், சாலைகள், என வருவாய் துறை ஆவணங்களில் கோடிட்டு காட்டப்படுகிறது, அதில் கட்டிடங்கள், சாலைகள் என தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர், இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியீட்டும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரில் கேள்வி எழுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வட்டத்திற்கான" ஆட்சியர்"கண்டுகொள்ளாமல் , கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசும் பொருளாக மாறி வருகிறது, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
அரசு சொத்துக்களை அபகரிப்பு செய்வது கிரிமினல் குற்றமாகும் என நீதிமன்றங்கள் எச்சரித்தும், நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்களே அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் நிலை இருந்தும் , இதைப் பின்பற்றாத அரசு அலுவலர்களின் நிலை குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவிப்பதோடு, சட்டம் என்பது ஏழை எளிய மக்களுக்கு மட்டும்தானா? அரசு சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு, அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் அரசு அலுவலர்களுக்கும் இல்லையா? என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது.


0 Comments