இராமநாதபுரம் மாவட்டம் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதன் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக அரசால் மதுபான கொள்கை ஊழல் என பொய்யான வழக்குதொடுக்கப்பட்டு இதனை விசாரிக்க நாட்டின் பாதுகாப்பு அரணாகஇருக்ககூடிய சி.பி.ஐ., மற்றும் E.D போன்ற விசாரணை அமைப்புகளை தூண்டிவிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையை கலங்கப்படுத்திய இந்த வழக்கு டெல்லி நீதிமன்ற விசாரணை அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றமற்றவர் எனவும் அவர் மீது தொடுக்கப்பட்ட இந்த ஊழல் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என வழக்கை தள்ளுபடி செய்த்தோடு அரவிந்த் கெஜ்ரிவாலை வழக்கிலிருந்து விடுவித்தது.
இந்தியாவே உற்று நோக்கிய இந்த தீர்ப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.ஆம் ஆத்மி கட்சியின் தேசியதலைவர் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில் பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செல்வராஜ் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முருகேசன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 Comments