மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தியாகி ஜி நாராயணசுவாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற மேல்நிலைத் தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் சங்கம் சார்பாக மாதக் கூட்டம் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் திருவேங்கடம் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வி, செயற்குழு உறுப்பினர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.செயலர் ரெங்கராஜ் அறிக்கை வாசித்தார்.அமைப்பு செயலர் பத்மனாபன் தொகுப்புரை வழங்கினார்.தகவல் தொடர்பு செயலர் மதிவாணன் அறிமுக உரையாற்றினார். நீடூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் மீனாட்சி ஜவஹர் சிறப்புரையாற்றினார் விழா நிறைவாக உறுப்பினர் இராஜேஸ்வரி நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.

0 Comments