கீழ்வேளூர் அருகே முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்



தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு  கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் ஆந்தகுடியில் பட்டாசுகள் வெடித்தும் திமுக கிளை கழகம் சார்பில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அரசு தி.ரமேஷ் ஏற்பாட்டின் பேரில்  தூய்மை பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 



கீழ்வேளூர்   வடக்கு ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ப.கோவிந்தராஜன், கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கா.பழனியப்பன் ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்வில் திமுக கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் நத்தர்ஷா, முருகானந்தம்,மோகன்,ரமேஷ், குமார் கிளை கழக செயலாளர்கள் அண்ணாதுரை, உலகநாதன்,பாஸ்கர், ராஜேந்திரன் , ஒன்றிய பிரதிநிதிகள்,கழக உடன் பிறப்புகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


Post a Comment

0 Comments