கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி மகேந்திரன் ஏற்பாட்டில் வேட்பாளர் சுதாகருக்கு நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு



கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி. மகேந்திரன் ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளர் வி சுதாகர் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். திருவள்ளூர் வடக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளராக வி.சுதாகர் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து வேட்பாளர் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி மாவட்டம் கட்சியினரை சந்தித்து வந்தார். அதன்படி கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் டி. சி மகேந்திரன் ஏற்பாட்டில் அவரது கட்சி அலுவலக வளாகத்தில் நிர்வாகிகளை வி.சுதாகர் வேட்பாளர் சந்தித்தார். அப்பொழுது வேட்பாளருக்கு நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்தனர்.



 இதனையடுத்து நிர்வாகிகளுக்கு வேட்பாளர் அணிவித்தார். நிர்வாகிகள் வரும் தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெற முழு வீச்சில்ஈடுபடுவதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுண்ணாம்புக்குளம் எஸ் எம் ஸ்ரீதர், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பல்லவடா ரமேஷ் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் சியாமளா தன்ராஜ், அம்மாபேரவை மாவட்ட துணைத் தலைவர் புது கும்மிடிப்பூண்டி ககுமார், பெருவாயல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், பன்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மணி, நாகராஜ் சங்கர். இளவரசன்.. உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள்பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments