இராமநாதபுரம் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் துவக்கிவைத்தார்

 


இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி, இராமேஸ்வரம் நகராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர்   வழிகாட்டுதலிலின்படி, தூய்மை இராமேஸ்வரம் என்ற  நோக்கத்தை முன்னெடுக்கும் வகையில் 12 புதிய CNG பேருந்து சேவையை தமிழகபோக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்  S. S. சிவசங்கர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கமும்  இணைந்து கொடி அசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தனர்.

 பின்னர் , பேருந்தில் பயணம் செய்து சேவையை மக்களுடன் பயணம் செய்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர்,சிம்ரன்ஜீத் சிங் காலோன்  மற்றும் அரசுத் துறை அலுவலர்கள்,  ராமேஸ்வரம்  நகர்மன்றத் தலைவர்,மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments