சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் போலீசர்களும் இணைந்து வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வாக்காளர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்தும் விதமாக அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி முக்கிய விதிகளான தாலுகா ரோடு, அக்கினி பஜார், மூலக்கடை, நான்கு ரோடு, காரைக்குடி ரோடு, மதுரை ரோடு என அனைத்து வீதிகளிலும் வழியாக வந்து நிறைவாக அண்ணா சாலையை வந்தடைந்தது.

0 Comments