ஈரோடு: கணபதிபாளையத்தில் யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக உலக மகளிர் தின விழா


 ஈரோடு மாவட்டம்,  மொடக்குறிச்சி ஒன்றியம், புஞ்சை காளமங்கலம் கிராமம், கணபதி பாளையத்தில் உலக மகளிர் தின விழாவினை முன்னிட்டு யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக பெண் ஆளுமைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா  நடைபெற்றது. கணபதி பாளையம் மருத்துவர் தமயந்தியின்  இல்லத்தில் யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் பெண் ஆளுமைகள் தலைவர் மோனிஷா, பொதுச் செயலாளர் பிரவீணா மற்றும் செயற்குழு உறுப்பினர் மாலினி அனைவருக்கும் அடையாள அட்டையியை சிறப்பு விருந்தினர்  ஈரோடு அரசு  தலைமை மருத்துவமனை ஓய்வு பெற்ற மருத்துவர் தமயந்தி  வழங்கினார்.



அறக்கட்டளையின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி பெண் ஆளுமைகள் கலந்து ஆலோசனை செய்தார்கள் நிகழ்ச்சியினை அறக்கட்டளையின் நிறுவனர் புன்னகை தூரன் இரா சங்கர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பிரவீணா பெண் ஆளுமை அவர்களின் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது அறக்கட்டளையின் பெண் ஆளுமைகள் மற்றும் சிறப்பு விருந்தினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 , 6382211592 .

Post a Comment

0 Comments