சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிபெற வேண்டி திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமியா நாராயணன் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கிய நிர்வாகிகள்

 


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமியா நாராயணன் பெருமாள் கோவிலில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகமும், தலைவர் விஜய்யும் வெற்றி பெற வேண்டி மாவட்ட கொள்கை பரப்பு அணி ஏற்பாட்டில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் தலைமையில் கழக நிர்வாகிகள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானம் வழங்கினர்.



 இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு,விக்னேஷ்,பழனிக்குமார், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சேக், திருக்கோஷ்டியூர் கிளை செயலாளர் கனிமொழி வாசுதேவன்,வடக்கு மாவட்ட கொள்கைப் பரப்பு அணி அமைப்பாளர் ஹேமலதா, மூர்த்தி, இணை அமைப்பாளர்கள் தமிழ்செல்வி, கலைமகள் ராமசாமி, கோகிலா கோபால், அலமேலு மங்கை,துணை அமைப்பாளர் முத்துலெட்சுமி, ராணி,பொருளாளர் முரளி ஆகியோர் ஈடுபட்டனர்.

 இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை, மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் பூத் செயலாளர்கள் கழக தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments