திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் இயங்கி வரும் MBS விவேகானந்தா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 30-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பள்ளியின் அலுவலக மேலாளர் எஸ். ஸ்ரீதர் வரவேற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பள்ளியின் ஆலோசகர் M. அமிர்தலிங்கம் முன்னிலையில் பள்ளியின் தாளாளர் M.B. சாந்தா பாஸ்கர் தலைமை தாங்கி விழாவைத் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் ESI மருத்துவ அதிகாரி மருத்துவர் Dr. K.S. ஜெயராமன் (ஓய்வு ) கலந்துகொண்டு பேசுகையில்:
"இப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதியில் மிகச்சிறந்த கல்விச் சேவையை ஆற்றி வருவது பாராட்டுக்குரியது. மாணவர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து ஒழுக்கத்துடன் வளர வேண்டும். இப்பள்ளி மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்" என்றார்.
பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் ஒட்டுமொத்த அளவில் முதலிடம் பிடித்து, சிறப்பாக நடனமாடிய மாணவிக்கு ரூபாய் 5,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதனை மகாவீர் தங்க மாளிகை அதிபர் S. மகாவீர் தனது சொந்த நிதி மூலம் வழங்கி மாணவியைக் கௌரவித்தார்.
தொடர்ந்து மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. குறிப்பாக, மாணவர்களின் நடன நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் கௌரவ விருந்தினர்களாக:
M. சண்முகம் (மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர்)
C. ஜெயபால் (ஓய்வுபெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்)
B. ஸ்ரீதரமூர்த்தி மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கௌசல்யா தினேஷ் குமார், பிரபாவதி சேஷாத்ரி
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆரணி M K V அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் ராஜ்குமார் ஆடிய நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி விழிப்புணர்வு நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் M.V. பிரகாசம் நன்றி கூறினார்.






0 Comments